பி.எப் உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் காலக்கெடு ஜனவரி வரை நீட்டிப்பு அதிகாரிகள் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 31, 2017

பி.எப் உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் காலக்கெடு ஜனவரி வரை நீட்டிப்பு அதிகாரிகள் தகவல்

பிஎப் உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமுக்கான காலக்கெடு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ்களை அந்தந்த வங்கிகளில் சென்று புதுப்பித்து வந்தனர். மேலும் கடந்தாண்டு ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழுடன், ஆதார் எண்ணை அந்தந்த வங்கி மற்றும் பி.எப் அலுவலகத்தில் இணைத்தனர்.

இந்நிலையில் பி.எப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் தகுதி படைத்தவர்கள். இதில், ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது.

ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நிறுத்தப்பட்டது. இதையடுத்து பி.எப் அலுவலகங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த சிறப்பு முகாம் காலக்கெடு வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ‘ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் வங்கியில் உயிர்வாழ் சான்றிதழ்களை கொடுத்து வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். கடந்த நவம்பர் மாதம் பண மதிப்பு இழப்பு காரணத்தினால் உயிர்வாழ் சான்றிதழ்களை வழங்க ஜனவரி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. மேலும் ஆதார் எண்ணை இணைக்காத ஒரு லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் இதுவரை 70 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர்.

மீதமுள்ளவர்கள் இணைப்பதற்கான சிறப்பு முகாம் வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வரும் 2018ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யும் பணி நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் அதற்கான சிறப்பு முகாம் வரும் ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment