அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 31, 2017

அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்

  • தமிழக பொது விநியோக திட்டத்தில் மாற்றமா? உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும்,  இனி ரேசனில் பொருட்கள்
    கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
    பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்காது என்றும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றம் இல்லை. வழக்கம்போல் ரேசன் கடைகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.
    மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் தமிழக அரசுக்கு பொருந்தாது. குறிப்பாக குடும்ப அட்டைகளை நீக்குவதற்கான அடிப்படை விதிகள் தமிழகத்திற்குப் பொருந்தாது. பொது விநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் உணவு பாதுகாப்பை தமிழகம் அளிக்கிறது.பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை கடைசியாக செயல்படுத்திய மாநிலம் தமிழகம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சில நிபந்தனைகளுடன் தான் தமிழகம் இணைந்தது. மாநில நிதியில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கக்கூடாது என்பது நிபந்தனை. இதன்மூலம் தமிழக அரசின் நிதியில் இருந்து சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் விலக்கு பெறப்பட்டுள்ளது
    இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment