இந்தியாவில் வேலை இல்லாத 500 நபர்களில் 3 நபர்களுக்கு தான் வேலை கிடைக்கின்றது: ஆய்வு அறிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 28, 2017

இந்தியாவில் வேலை இல்லாத 500 நபர்களில் 3 நபர்களுக்கு தான் வேலை கிடைக்கின்றது: ஆய்வு அறிக்கை

இந்தியாவில் சராசரி வேலை வாய்ப்பு விகிதம் 0.57 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 2015-ம் ஆண்டு 500 நபர்கள் வேலை தேடுகின்றார்கள் என்றால் 3 நபர்களுக்கு மட்டும் தான் வேலைக் கிடைக்கின்றது என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு மாநிலம் கூட 2015-ம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 1 சதவீதத்திற்கு அதிகமாக வேலை வாய்ப்பினை அளிக்கவில்லை.

தேசிய வேலை வாய்ப்பு வழங்கும் சேவையான என்சிஎஸ் 53 அரசு மற்றும் தனியார் துறைகளில் 3000 தொழில்களில் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது.
மொத்த பதிவு எண்ணிக்கை
என்சிஎஸ்-ல் மொத்தம் 14.85 லட்சம் ஊழியர்கள் பதிவு செய்துள்ளார்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் இடையில் தொடர்பை ஏற்படுத்திச் செயல்படுத்துகின்றது.
தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின் படி பல பரிமாற்ற அலுவலகங்கள் தனியார் துறையில் உள்ளன. அமைச்சகத்தின் தரவு 2012 முதல் 2015 செப்டம்பர் வரையானது ஆகும்.

அதிக வேலைவாய்ப்பு
குஜராத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளதால் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டில் வேலைக்காகப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை
2015-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் 80 லட்சம் நபர்கள் வேலைவாய்ப்பிற்காகப் பதிவு செய்துள்ளனர். குஜராத்தில் வெறும் 6.88 லட்சம் நபர்கள் மட்டும் தான் பதிவு செய்துள்ளனர்.

ஐந்து மாநிலங்களின் நிலை
தமிழ்நாட்டினை போன்றே மேற்கு வங்கம், உத்திர பிரதேசம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிக நபர்கள் வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர்.
2015-ம் ஆண்டு இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம் செய்யப்பட்ட மொத்த பதிவில் 60 சதவீதம் பதிவுகளைச் செய்துள்ளனர்.

எவ்வளவு நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது?
அதிர்ச்சியூட்டும் விதமாக 0.1 சதவீதம் அதாவது 27,600 நபர்களுக்கு மட்டும் தான் மொத்தமாகப் பதிவு செய்தவர்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிறிது கூடு நெருங்காத வேலைவாய்ப்பு
இந்தத் தரவை பார்க்கும் போது வேலை வாய்ப்புகள் உருவாக்குவதும் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் சிறிது கூடு நெருங்கவில்லை என்பது தெரிகின்றது.

குறைந்து வரும் வேலைவாய்ப்பு விகிதம்
வேலைவாய்ப்பு கிடைக்கும் விகிதம் 2012-மாண்டு இருந்த 0.95 சதவீதத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகின்றது. 2013-ம் ஆண்டு 0.74 சதவீதமாகவும், 2014-ம் ஆண்டு 0.70சதவீதமாகவும் இதுவே 2015-ம் ஆண்டு 0.57 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

அதிக வேலைவாய்ப்பு கிடைத்த மாநிலம்
அதே நேரம் குஜராத்தில் மட்டும் 83.3 சதவீதம் வரை அதாவது 2.53 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் நிதி நகரம் எனப்படும் மகாராஷ்டிரா 13,400 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்துள்ளது.

No comments:

Post a Comment