2,500 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை : ஐந்து ஆண்டுகளாக கல்வித்துறை மவுனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 26, 2017

2,500 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை : ஐந்து ஆண்டுகளாக கல்வித்துறை மவுனம்

தமிழகத்தில், 2,500 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கப் படவில்லை. அதனால், 25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், 58 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 37 ஆயிரத்து, 500 அரசு பள்ளிகளும், 8,400 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அடங்கும். மற்றவை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் மற்றும் பள்ளிக்கல்வி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள்.இவற்றில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும்; பள்ளிக்கல்வியின் நேரடி நிர்வாக பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அங்கீகாரம்

புதுப்பிக்கப்படும்.
அங்கீகாரம் வழங்கப்படவில்லை
இந்நிலையில், பள்ளிக் கல்வியின்கட்டுப்பாட்டில் உள்ள, 2,500 சுயநிதி பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக, தமிழக பள்ளிக் கல்வியின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதனால், தனியார் பள்ளிகள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி உள்ளன.இது குறித்து, தனியார் நர்சரி, பிரைமரி, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது:
தாமதம் செய்கிறது.
சட்டப்படி பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்தால் மட்டுமே, பள்ளி வாகனங்களுக்கு உரிமம்கிடைக்கும். மேலும், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி பெறுவது போன்றவற்றிற்கும், அங்கீகாரம் தேவை. அதேபோல், மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, காப்பீடு பெறவும், அங்கீகார 
சான்றிதழ் அவசியம்.ஆனால், சுயநிதி பள்ளிகளுக்கு, அனைத்து உள்கட்டமைப்புகள் இருந்தும், ஐந்து ஆண்டுகளாக, அங்கீகாரம் வழங்காமல், பள்ளிக்கல்வித் துறை தாமதம் செய்கிறது. அதனால், இந்த பள்ளி நிர்வாகங்கள் ஒவ்வொரு நாளும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தேர்வு விஷயத்தில் அச்சத்துடனே இயங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, சிக்கலை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment