TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 27, 2017

TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு
பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆண்
ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்) காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியான பணிநாடுநர்களிடமிருந்து இன்று 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிக்கை எண்.05/2017
தேதி: 26.07.2017
பணி: சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்)
காலியிடங்கள்: 1325
பதவிக்குறியீடு 17ST
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்: அரசாணை எண் 242 உயர்கல்வி (பி1) துறை நாள்.18.12.2012 ன்படி 10+2+3+2/10+3+3+2/ 11+2+3+2 என்ற முறையில் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கு இறுதி நாளுக்கு (18.08.2017) முன்னதாகவே அனைத்து தகுதிகளுக்கான சான்றிதழ்களும் கண்டிப்பாக பெறப்பட்டிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ,500. (எஸ்சி,எஸ்ஏ,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.250) இதனை கடன் அட்டை, பற்று அட்டை, இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இதற்குரிய trbonlineexams.in/spl/ என்ற இணைப்பினை பயன்படுத்தி இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வானது 2 மணி மற்றும் 30 நிமிடங்கள் நேரத்திற்கு, 95 கொள்குறி வினாக்களைக் கொண்டு (ஒரு தாள்) நடத்தப்படும். 95 மதிப்பெண்கள் கொண்டது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.09.2017
மேலும் பணிநாடுநர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான முழுமையான விளக்கம் அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/SPL2017/26072017/TNotification.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment