அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே! CPS என்ற கொடிய அரக்கனை அழித்து TPF என்ற நண்பனின் கரம்பிடிக்க !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 29, 2017

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே! CPS என்ற கொடிய அரக்கனை அழித்து TPF என்ற நண்பனின் கரம்பிடிக்க !!


அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே! CPS என்ற கொடிய அரக்கனை அழித்து TPF என்ற நண்பனின் கரம்பிடிக்க !!
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே! CPS என்ற கொடிய அரக்கனை அழித்து TPF என்ற நண்பனின் கரம்பிடித்து நம் ஓய்வுகாலத்தை சிரமம் இல்லாமல், வசதியாக ஆக்கிக் கொள்ள நமக்கு கிடைத்திருக்கக் கூடிய அருமையான வாய்ப்புதான்  ஆகஸ்ட் 5 சென்னைப் பேரணியாகும்.
அதற்கு முன்னர் சென்னை வரை சென்று போராடும் அளவிற்கு நமக்கு பாதிப்புகள் உள்ளதா?

நாம் போடும் பணத்தின் அளவில் அரசும் போட்டு வட்டியுடன் கொடுக்கின்றதே.பின்னர் ஏன் இந்த சங்கவாதிகள் எல்லாம் cps வேண்டாம் என்று சொல்லி நம்மையும் நடுத்தெருவிற்கு இழுக்கின்றனரே! என்று நீங்கள் எண்ணினால் இப்பதிவை முழுமையாகப் படியுங்கள்!
ஏனெனில் பாதிப்புகள் என்னவென்று முழுமையாகத் தெரியாமல் போராட முடியாது.
1.PFRDA என்ற மத்திய அமைப்பில் தமிழக அரசு 2003லிருந்து இன்றுவரை நம்மிடமிருந்து பிடிக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை.சென்ற வருடம் பிப்ரவரி மாதம் நாம் கடுமையாகப் போராடிய பிறகுதான் cps லிருந்து இறந்தவர்களுக்கும்,ஓய்வு பெற்றவர்களுக்கும் பணத்தை கொடுக்கும் அரசாணை போடப்பட்டது.அதிலும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்!அப்பணத்தை உங்கள் கைகளில் கொடுக்கும் முன்னர் உங்களிடமிருந்து உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறப்படும்."நான் இனிமேல் அரசிடமிருந்து ஓய்வூதியம் கோரமாட்டேன்" என.
2.நீங்கள் ஓய்வுபெற்ற மறுநாளில் இருந்து உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்காது.
3.பணிக்கொடை இல்லை.(மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 10 இலட்சம்.)
4.கம்யூட்டேஷன் இல்லை.(ஓய்வூதியம் முன்கூட்டியே பெறுதல்)
5.உங்களுக்கு பிறகு உங்கள் துணைவருக்கு கிடைக்கும் குடும்ப ஓய்வுதியம் இல்லை.
6. ஒரு ரூபாய் ஓய்வுதியம் இல்லாத நிலையில் 58 வயதிற்கு பிறகு உங்களுக்கோ அல்லது உங்கள் துணைவருக்கோ எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் செய்து கொள்ள முடியாது(NHIS).
7.நீங்கள் பெறப்போகும் cps தொகைக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
8.பணிக்காலத்தில் தலை போகிற அவசரம் என்றாலும் உங்கள் தொகை உதவாது.
9. ஓய்விற்கு பின் கிடைக்கும் மொத்தத் தொகை உங்களுக்கு எமனாகவும் அமையலாம்.
10. தள்ளாத வயதில் மொத்தப் பணத்தையும் இழந்துவிட்டால் நீங்கள் பெற்ற குழந்தைகளுக்கு நீங்களே பெருஞ்சுமையாகலாம்.
11. 58 வயதிற்கு பிறகு நீங்கள் எந்த வேலை செய்து மருந்துச் செலவிற்கும்,உணவிற்கும் சம்பாதிக்கப் போகின்றீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள் (பிச்சை எடுப்பதைத் தவிர)
ஆகவே தள்ளாத வயதில் தனியாக நாதியற்று நிற்கப் போகின்றீர்களா? இல்லை இளமையிலேயே சங்கங்களுடன் சேர்ந்து போராடி உங்கள் இறுதிக்  காலத்தை வளமாக்கப் போகின்றீர்களா?
புறப்படுங்கள்! நீங்கள் முடிவெடுத்து விட்டால் உங்களைத் தடுக்கும் சக்தி எதுவும் இல்லை!! நீங்கள் இப்போது தெருவில் இறங்கி போராடுவது உங்களுக்காக மட்டுமல்ல, நீங்கள் வராமல் இருப்பதற்காக காரணங்களாகச் சொல்லும் துணையர்,குழந்தைகள்,உறவுகளுக்காகவும்தான்.
cpsஐ ஒழிப்போம்
Gpf ஐ பெறுவோம்
போராட்ட களத்தில் போராடுவோம்
தொடர்ந்து போராடுவோம்...

No comments:

Post a Comment