திண்ணை விருதுகள் 2017 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 8, 2017

திண்ணை விருதுகள் 2017



திண்ணை விருதுகள் 2017
திரு .பொன்குமார்
இணைஇயக்குநர் S.C.E.R.T , சென்னை
நீதியரசர் ப.மதுசூதனன்
மாவட்ட நீதிபதி, வேலூர்
திரு.பொன்ராஜ்
பாரத்ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களது அறிவியல் ஆலோசகர்
திரு.பாஸ்கர் சக்தி
எழுத்தாளர், வசனகர்த்தா, சென்னை
பேரா.பொ.இராஜமாணிக்கம்
ஆசிரியர். விஞ்ஞானச்சிறகு
திருமிகு. திருச்செந்தூரான்
தலைவர், VISION INDIA MOVEMENT
இந்தியாவின் முதல் பெண்ணாசிரியை சாவித்திரிபாய் பூலே நினைவாக
சிறந்த பள்ளிகளுக்கான விருது
கர்னல் பென்னிகுக் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது
மாமனிதர் ஜேம்ஸ் கிம்டன் நினைவாக ஆற்றல்மிகு பேராசிரியர் விருது.
கர்ம வீரர் காமராசர் நினைவாக நேர்மையாளர் விருது.
பாரத்ரத்னா ஏ. பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக நல்லாசிரியர் விருது
என மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன.விருதாளர்களுடைய தேர்வில் தனிமனித வெளிச்சம் கவனமாகத் தவிர்க்கப்பட்டு செயல்பாடுகளே முக்கியத்துவம் பெற்றன.
சாதியைக் கேடயமாகவோ ஆயுதமாகவோ பயன்படுத்தமாட்டேன் என்றுரைத்த நீதியரசர் தான் தற்கொலைக்கு முயன்றதையும் விடாமல் போராடி வெற்றி பெற்றதையும் விளக்கிய போது அரங்கமே அமைதியில் உறைந்தது.
நல்லாசிரியர் ,நேர்மையாளர் என்னும் பதங்களே தவறு. ஆசிரியர்கள் என்றாலே நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் என்றாலே நேர்மையாளர்களாகத்தான் இருக்கவேண்டும் என பாஸ்கர் சக்தி பேசியது அனைவரையும் ஈர்த்தது.
அப்துல் கலாம் அவர்களது கனவு இந்தியாவை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு தான் அதிகம். ஆசிரியர்கள் நினைத்தால் மட்டுமே நல்லதொருசமுதாயம் உருவாகும். அரங்கம் அதிரும் கைதட்டல்களோடு பொன்ராஜ் தனது உரையை முடித்தார்.
பேரா. பொ.இராஜமாணிக்கம் அவர்களது உரையில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் விதைக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கருத்துகளே மேலோங்கி காணப்பட்டன.
இணைஇயக்குநர் பொன்குமார் அவர்கள் தனது இளமைக்கால வாழ்க்கையையும் சுவையான பள்ளி சார்ந்த அனுபவங்களையும் நகைச்சுவையாக கூறி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழத்தினார். உலகிலேயே சிறந்த பள்ளி எதுவென்றால் அது தான் பணிபுரிந்து வரும் பள்ளி தான் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கும்  தோன்ற வேண்டும். நினைப்பதுடன் நிஜமாக்கவும் முயல வேண்டும் என பேசியது ஆசிரியர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.
விருதாளர்களுடைய விபரங்கள் புகைப்படத்தோடு திரையிடப்பட்டன. மிகச்சிறந்த அறிமுகத்தோடு விருதுகள் வழங்கப்பட்டன.
திண்ணையின் தன்னார்வத் தோழர்களின் கனிவான உபசரிப்புடன் பரிமாறப்பட்ட மதியஉணவு கூடுதல் சுவையாக இருந்ததாக அனைவரும் கூறியது ஏற்பாட்டாளர்களுக்கு மகிழ்வளித்தது.
கலகல வகுப்பறை சிவாவும் மக்கள் கலைக்கூடம் பெருஞ்சித்ரனும் இணைந்து கோமாளிகளின் குதிரை நாடகத்துடன் இணைந்த கல்விசார் உரையாடல் நிகழ்வினை தொகுத்து வழங்கினர்.
  
கனவு பள்ளி
கனவு ஆசிரியர்
கனவு சமுதாயம்
எனும் தலைப்பில் கோமாளிகளின் கிண்டல்களுக்கும் கேளிகளுக்குமிடையே உரையாடல் துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இருநூறு ஆசிரியர்களும் பங்கேற்றனர். கால நெருக்கடி காரணமாக விரிவான கலந்துரையாடல் நடைபெறவில்லை.
புதிய முயற்சி முழுவெற்றியடையவில்லை எனினும் தேனி மாவட்டத்தில் முற்போக்காக செயல்படும் இருநூறு ஆசிரியர்களை மிகச்சிறந்த ஆளுமைகளுடன் ஒரு நிகழ்வில் இணைத்து அவர்கள் மேலும் வலுவாக பணிசெய்யும் அளவிற்கான ஊக்கத்தை வழங்குவதாக நிகழ்வு நடந்தேறியது.
இணைஇயக்குநர் பொன்குமார் அவர்களது விருப்பப்படி திண்ணையின் பயிற்சி மாணவர்களுக்கு இரவு ஏழு மணிவரை போட்டித்தேர்வுகள் சார்ந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மடைதிறந்த வெள்ளம் போல் பாடப்பொருள் ,படிக்கும் முறை ,தேர்வினை அணுகும் முறைகள்,உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து இணைஇயக்குநர் அவர்கள் மிகச்சிறந்த உரையை வழங்கினார். நடமாடும் பல்கலைக் கழகமாகவே மாணவர்கள் அவரைக்காணத் துவங்கினர். மாணவர்களுடைய மனதில் நம்பிக்கை நாயகனாக இணைஇயக்குநர் பொன்குமார் அவர்கள் இடம்பிடித்தார்.
ஆகச்சிறந்த செயல்பாட்டாளர்களை மிகச்சிறந்த ஆளுமைகள் வாயிலாக கொளரவப்படுத்தும் வாய்ப்பினை திண்ணை விருதுகள் 2017 வழங்கியுள்ளது.
"ஏழ்மையும் அறியாமையும் கனவுகளை அழித்துவிட அனுமதியோம் "
நன்றியுடன்
திண்ணை மனிதவள மேம்பாட்டு மையம்
தேனி.
கனவு பள்ளி






விழா மேடையில்

No comments:

Post a Comment