ஏழை குழந்தைகளின் படிப்புக்கு ரூ.3 கோடி நிதி!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 19, 2017

ஏழை குழந்தைகளின் படிப்புக்கு ரூ.3 கோடி நிதி!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் பல குழந்தைகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில்,
பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா அமைப்பு இந்தியாவில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டி உதவி செய்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா அமைப்பு, இந்தியாவிலுள்ள ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவும் நோக்கில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நிதி திரட்டி வருகிறது.
சமீபத்தில் வாஷிங்டன் நகரின் புறநகர் பகுதியில் பிரதாம் யு.எஸ்.ஏ. அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் 360 பேர் பங்கேற்றனர். அதில் நடிகர் ஆர்.மாதவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும், ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்காக நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் 1.75 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
இவ்வாறு பிரதாம் யு.எஸ்.ஏ. அரசு சாரா அமைப்பு ஏழை குழந்தைகள் கல்வியறிவு பெற 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டி உதவி செய்துள்ளது.

No comments:

Post a Comment