7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள் ஊதியஉயர்வுorஊதியநகர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 21, 2017

7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள் ஊதியஉயர்வுorஊதியநகர்வு

7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்
ஊதியஉயர்வுorஊதியநகர்வு
1) வளரூதியம்(Increment)
Increment கணக்கீட்டில் நாம்  3%கணக்கிடும்போது, அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான்  ஊதியஅணியில் (paymatrix) நமக்கான நிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது,
என்பதால் இனி Increment சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள
தேவை இல்லை.
எனவே 3% Increment எணில் தற்போது பெரும் புதிய ஊதியத்திற்கு அடுத்த ஊதியத்தைப் புதிய அடிப்படை ஊதியமாக எடுத்து கொள்ளவேண்டும்.
2)ஊக்கவளரூதியம்(Incentive)
      ஊக்க வளரூதியம் எனில் 3%+3% தற்போது பெரும் புதியஊதியத்திறக்கு அடுத்த இரண்டாவது ஊதியத்தை எ.டு;10 ம் Pay cell ஊதியம் பெற்றால் 12ஆம் Pay Cell ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
3)தோ்வுநிலை(Selectiongrade)
                      &
4) சிறப்புநிலை(Specialgrade)
   
         Rs 1300முதல்Rs 5700 வரையிலான தரஊதியம்(Gp) அதாவது Level 1 முதல் 23 வரை நமது துறையைப் பொருத்தவரை OA முதல் Add.To &AO வரை ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தோ்வுநிலை)20 ஆண்டுகள் (சிறப்புநிலை)பணிபுரிந்தால், வழக்கத்தின்படியே 3%+3%, ஊதியஉயர்வு பெற்றுக்கொள்ளலாம்.
எனவே இதனையும் தனியே கூட்டிப் பெருக்காமல்,ஒவ்வொரு 3%திற்கும் ஊதியஅணியில் (Paymatrix)தான் உள்ள ஊதிய நிலையின் அடுத்த ஊதியத்திற்கு நகா்ந்து விடலாம்.இது3%+3% என்பதால் ஊதிய அணியில்
(Paymatrix) தற்போதுபெற்றுள்ள புதிய ஊதீயத்திலிருந்து2வது ஊதியத்திற்கு நகர வேண்டும்.
அதாவது 12 ஆம் Pay cellஐ அடிப்படையாக கொண்ட நபர் 14 ஆம் அணிஊதியத்திற்கு நகர்ந்து அதையே அடிப்படை ஊதியமாகப் பெருவாா்.
5)தேக்கவளரூதியம்(Stagnaton Increment)
                    
தரஊதியம் Rs. 6000முதல் 10000 அதாவது (Level 24 முதல் 32 வரை) உள்ளோா்.நமது துறையைப் பொருத்தவரை கரூவூல அலுவலா்&CAO பணியிடம் மற்றும் அதற்கும் மேல் உள்ள பணியிடங்களில்,ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 10 ஆண்டுகள் பணி முடித்தால் ஒவ்வொரு 10 ஆண்டு முடிவிலும்,3%தேக்க வளரூதியம் அனுமதிக்கபடும்.அவரது நிலையில், 14 ஆம்அணி ஊதியம்(PayCell) பெருபவர் 15 ஆம் அணிஊதியத்திற்கு (Paycell) நகர்த்ப்படுவாா்.
6)வெகுமதி வளரூதியம்(Bonus Increment)

 ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 30 ஆண்டுகள் பணிமுடித்திருந்தால்,30 ஆம்
ஆண்டு முடிவில் 3%Bonus Increment அனுமதிக்கப்படும். Paymarrix ல் உள்ள Paycellல் 15 ஆம் அணி(PayCell) ஊதியம் பெருபவர் 16 ஆம் நிலை ஊதியத்திற்கு நகா்த்தப்படுவாா்.
7)கூடுதல் வளரூதியம் (Additional Increment)
    
         01.01.2016 ல்  பழைய ஊதிய அடிப்படையில் தனது நிலைக்கான உச்சபச்சஊதியத்தை, அடைந்தால் அதாவது 5200−20200 என்பதில் 20200
என்ற உச்சபச்சத்தை அடைந்ததால் 2 ஆண்டுகள் ஊதிய உயர்வின்றி இருப்பவருக்கு 01.01.2016 ல் புதிய ஊதியத்தை நிர்ணயித்தபிண் கூடுதலாக
ஒரு 3% Increment அளிக்கவேண்டும்.இவர் 2 ஆண்டிற்கும் மேலாக இதே நிலையில் (20200) இருந்திருப்பாரேயானால் .ஒவ்வொரு 2ஆண்டு முடிவிற்கும்3% Increment அனுமதித்து புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படவேண்டும்.
8)முத்தோா் இளையோா் ஊதிய முரண்பாடு(Junior get MorePay)

இதற்கு 3%Increment மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது இளையோரை விட
முதியவருக்கு Pay Cellல் ஒரு Cell அதிகரிக்கப்படும். இளையோா் 15 ஆம் PayCell என்றால் மூத்தோா்16 ம் Pay செல்லில் வைக்கபடுவாா்.
9)தனிஊதியம்( Personal Pay)
        ஆசிரியர்,BDO, Thashiltar, போன்றோா் பெற்றுவந்த தனிஊதியம் 500&750 தொகையானது 1300&2000 மாக உயர்த்தபட்டுள்ளது. ஆனால் 6 ம் ஊதியக்குமு
போன்று 7 ம் ஊதியக்குமுவில் தனி ஊதியஉயர்வு கணக்கீட்டிற்கு,(எந்தவிதமான ஊதியஉயர்வு கணக்கிட்டிற்கும்), இத்தொகையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

No comments:

Post a Comment