தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 10, 2017

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!!


தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. 25-ம் தேதி சூரசம்ஹாரம்
நடைபெறும்.
இவ்வாண்டு கந்த சஷ்டி விழா அக்.20-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு யாகசாலைக்கு அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்குகிறது. 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
இக்கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.அக்டோபர் 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment