இராமநாதபுரம் மாவட்டத்தில் முழு சுகாதாரத்தினை ஏற்படுத்தி சுகாதாரத்தில் தன்னிறைவு என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொண்டு வருவதுடன், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கழிப்பறை இல்லா வீடுகளை கண்டறிந்து, தனி நபர் கழிப்பறை திட்டம், தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு பணிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முழு சுகாதாரத்தினை வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
இத்தகைய தூய்மை இயக்கத்தினை பரவலாக்கும் விதமாக புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பரமக்குடி அரசு பள்ளி ஆசிரியர் சரவணகுமார் தன்னார்வத்துடன் உருவாக்கியுள்ள இந்த மணல் சிற்பங்களை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். பலவகை வண்ணங்களில் தூய்மை இயக்கத்தினை காட்சி படுத்தும் இந்த மணல் சிற்பங்கள் மூலம் மக்கள் மனதில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உருவாகும் எனவும், இது போன்ற காட்சி படுத்தலின் மூலம் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நடராஜன், அலுவலர்களை கேட்டு கொண்டார்.
No comments:
Post a Comment