தனி ஊதியம் பற்றி ஒரு பார்வை🔸 1971 இல் 2வது , 1988இல் 5வது, 1996இல் 6வது ஊதிய குழுக்களில் சில துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட
தன் ஊதியமானது,🔸 முறையே 1978இல் 3வது, 1996இல் 6வது, 2006 இல் 7வது ஊதிய குழுவின் அடிப்படை ஊதியத்திலே சேர்க்கப்பட்டு, அதன் பின்னரே புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*
*🔸 தனி ஊதியம் என்றாலே அகவிலைப் படி கணக்கிடுவதற்கு எடுத்து கொள்ள வேண்டும்.*
*🔸 இந்த ஊதிய குழுவில் PPயை அகவிலைப் படி கணக்கீட்டிற்கு எடுத்து கொள்ளலாம் என்ற வரி இருப்பதாக தெரியவில்லை.*
*🔸 ஆகையால் PPயை பற்றி பல சந்தேகம் எழுந்துள்ளது.அப்படி இருக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த சந்தேகம் தீராமல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது இதுவே உண்மை.*
*🔸 PP யை அகவிலைப்படி உயர்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது அடிப்படை விதிகளில் (FR) இருந்தாலும், இந்த ஊதிய குழுவை பொறுத்த வரை தன் ஊதியம் தனியாகவே வைக்கப்பட்டுள்ளது.*
*🔸 8வது ஊதிய குழுவில் தன் ஊதியத்தை தனியாக வைத்ததின் நோக்கம் 7வது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு PP வழங்கப்பட்டுள்ளது.அதை BP சேர்த்தால் இ.நி.ஆசிரியர்கள் ஊதியம் அதிகம் பெற்று விடுவார்கள் என்று எண்ணியே தனியாக வைத்துள்ளனர்.*
*🔸 ஏற்கனவே கிரேடு பேவை குறைத்து, அதி பாதாளத்தில் தள்ளி விட்டனர்.இந்த ஊதிய குழுவால் இடைநிலை ஆசிரியர்களைசவக் குழியில் தள்ளி விட்டனர்.*
*🔸 ஆக மொத்தம் ஊதிய குழுவால் இடைநிலை ஆசிரியர்கள் பயனடைந்து விட கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது போல.
*இவண்*
அ.சி.ஜெயப்பிரகாஷ்
ஒன்றியப் பொருளாளர்தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்
*அரூர் ஒன்றியம் தருமபுரி.
No comments:
Post a Comment