ஜன.,18ல் திருப்புதல் தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 15, 2017

ஜன.,18ல் திருப்புதல் தேர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள்,பொது தேர்வுக்கு தயாராகும் வகையில், பல்வேறு வகை பயிற்சிகள் மற்றும் தயார்படுத்தும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது.
தற்போது, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு வரும், 23ல், முடிகிறது. பின், விடுமுறை முடிந்து, ஜன., 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஜன., 18ல் திருப்புதல் தேர்வை துவங்கி, 31க்குள் முடிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்களை தயார்படுத்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment