பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் மடிக்கணினி வழங்கப்படும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 5, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் மடிக்கணினி வழங்கப்படும்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் மடிக்கணினி வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கீதா ஜீவன் பேசும்போது, மாணவர்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
அப்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் குறுக்கிட்டுக் கூறியது:
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக 15 லட்சம் மடிக்கணினிகள் வாங்குவதற்கு நடவடிக்கை முடிந்துள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்

No comments:

Post a Comment