மேல்நிலை எச்.எம்., நிலைக்கு உயரும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 5, 2019

மேல்நிலை எச்.எம்., நிலைக்கு உயரும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம்

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முடிவுக்கு வருகிறது.பள்ளி கல்வித்துறையில் 2017 மே மாதத்தில் இருந்து தொடர்ந்து பல சீர்த்திருத்தங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடப்பட்டன. நர்சரி முதல் மேல்நிலைப் பள்ளி வரை கவனிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டன. இதற்காக கூடுதலாக மாவட்ட கல்வி அலுவலகங்கள் துவங்கப்பட்டன. தொடக்க கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டனர்.தற்போது தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பணி நடக்கிறது. தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன. தற்போது தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களே வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் வட்டாரக் கல்வி அலுவலர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதன்மூலம் அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்ய முடியும். ஏற்கனவே வட்டாரக் கல்வி அலுவலர்களாக இருப்போர் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முழுமையாக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும்

No comments:

Post a Comment