கட்டாயகல்வி சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது*
*பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை* *எடுக்கப்பட உள்ளதாக* *மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*இந்த சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், ஏழை மாணவ - மாணவியருக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது*
*குழந்தை தொழிலாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொருளாதார வசதி இல்லாததால் கல்வி கற்க முடியாமல் போவதை தடுக்கவும், கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை.குறையவில்லை*
*பள்ளிகளில், 8ம் வகுப்புக்கு பின், படிப்பை கைவிடும், மாணவ - மாணவியர் எண்ணிக்கை*
*குறையவில்லை*
*உத்தர பிரதேச*
*மாநிலத்தில்மட்டும், 2014 - 15ல், 8.66* *லட்சம் மாணவ - மாணவியர், பள்ளி படிப்பை பாதியில் அரசுக்கு* *கோரிக்கைகைவிட்டது, ஆய்வில் தெரிய*
*வந்துள்ளது*
*இந்த நிலை பல மாநிலங்களில் தொடர்கிறது*
*எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பிளஸ் 2 வரை, இலவச கல்வியை கட்டாயமாக்க வேண்டும்' என, பல மாநில அரசுகள், மத்தியவிடுத்துள்ளன*
*இது பற்றி, டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், அகில இந்திய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான, அசோக் அகர்வால் கூறியதாவது*
*இலவச கல்வி இல்லாததால், 8ம் வகுப்புக்கு பின், தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ - மாணவியர், அரசு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது.அப்போது, பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது*
*பலர், 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்*
*எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும்' என, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் கோரி வருகிறது*.
*இவ்வாறு அவர் கூறினார்*
*இந்நிலையில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது*
*அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது*
*பல்வேறு மாநிலங்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள், சமூக நல அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, பிளஸ் 2 வரை, கட்டாய இலவச கல்வியை நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது*
*விரைவில், இது*
*தொடர்பாக முடிவு*
*எடுக்கப்படும்*
*பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியில் நிறுத்துவதை தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்*
*ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்பு வரை மட்டும் இலவச கல்வி அளிப்பதால் பயன் இல்லை' என, பிரபல கல்வியாளரும், டில்லி, 'ஜாமியா மிலியா இஸ்லாமியா' பல்கலை பேராசிரியருமான, ஜானகி ராஜன் கூறினார்*
*இது பற்றி அவர் கூறியதாவது:ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்புக்கு பின், கட்டணம் செலுத்தி படிப்பது, மிகவும் கஷ்டம்*
*இதனால் பலர், 8ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தி விடுகின்றனர். 8ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, வேலை கிடைப்பது சிரமம்*
*எனவே, கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும். பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு, மேற்படிப்பு பற்றி சிறந்த புரிதல் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment