காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 17, 2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019
இன்றைய திருக்குறள்
குறள் எண் - 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
 காக்கின்என் காவாக்கா.
மு.வ உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.
கருணாநிதி  உரை:
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.

பொன்மொழி

நாம் தடுமாறி வீழ்வதில் தவறில்லை. ஆனால் எழுந்திருக்க எண்ணாமல் இருப்பது தான் தவறு.
  - அப்துல் கலாம்

Important  Words

 Draper  ஜவுளி வியாபாரி
 Druggist  மருந்து விற்பவர்
 Drummer  மேளம் அடிப்பவர்
 Dyer  சாயம் தேய்ப்பவர்
 Economist  பொருளாதார நிபுணர்

பழமொழி மற்றும் விளக்கம்\

கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணையா?
நாம் அறிந்த விளக்கம் :
ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்கு குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
குறுணி என்பது எட்டுப்படி கொண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது இதன் உண்மையான விளக்கம் ஆகும்.

பொது அறிவு
1) மனித மூளையின் மிகப் பெரிய பாகம் எது?
செரிபுரம்
2.) ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?
ஒரு முறை

விடுகதை

1. தண்ணீர் இல்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி, அவள் யார்?
ஒட்டகம்
2. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்புகள். அவன் யார்?
பாய்

இன்றைய கதை

ஓநாயும் ஆடும்
ஒரு காட்டில் ஒரு ஓநாயும். ஒரு வெள்ளாடும் இருந்தது. கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண். அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று. அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது. ஓநாயின் குணம் அறிந்த ஆடு ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.
ஒரு சமயம் ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது. அப்பாலம் ஒரு நபர் சென்றால் ஒருவர் எதிரே வர முடியாத அளவு குறுகலானது. பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு, பெரும்பகுதியை ஆடு கடந்ததும், ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது. இப்போது ஆடும், ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.
ஆடு ஓநாயிடம் நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன். சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால் நான் சென்றுவிடுவேன் என்றது. இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது. நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன். நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ என்றது.
ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு, நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன் என தான் பின்னால் சென்று ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது. ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.
ஆடு தன் புத்திசாலித்தனத்தால் ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன், கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால் உயிர் பிழைத்தது.

T. தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்

செய்திச் சுருக்கம்
🔮"ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்" - எம்.ஆர். விஜயபாஸ்கர்.
🔮ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி 10 பேர் காயம் என தகவல்.
🔮இந்தியாஉலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்.
🔮தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
🔮டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்.
🔮India successfully test-fires air-to-air missile Astra.
🔮We hope to have physical jurisdiction one day over PoK, says Jaishankar.
🔮Archeologists stumble upon 2,000-year-old urn in Villupuram.
🔮Rs 600-crore package to boost infrastructure in villages around KKNPP.
🔮India is better able to shape global agenda than ever before: MEA.

No comments:

Post a Comment