பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எதிர்கால வாக்காளர்களான பள்ளி மாணவர்களுக்கு, தேர்தல் பாடம் கற்பிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, தேர்தல் நடைமுறை விளக்க புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: பள்ளிகள் தோறும், ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், தேர்தல் கல்வியறிவு குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையம், மாநில மொழிகளில், கார்ட்டூன் படங்களுடன், தேர்தல் வழிகாட்டி குறிப்பு புத்தகம் தயாரித்துள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் அடிப்படை பணிகள், விழிப்புணர்வு பணி, தேர்தல் நடைமுறை, வேட்புமனு தாக்கல், பிரசார விதிமுறைகள், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை, பதவியேற்பு என, அனைத்து விபரங்களும் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையம் மூலம், மாவட்டம் வாரியாக, தேர்தல் கல்வியறிவு குழுவுக்கான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், குழுக்கள் அமைக்கப்பட்டு, புத்தகம் வினியோகிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment