மேலும் 4000க்கும் அதிகமான முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கடந்த சூன் 11 முதல் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாகஅறிவிக்கப்பட்டது. பின்னர் வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் காலாண்டு விடுமுறையில் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment