டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க அவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 27, 2019

டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க அவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும்

டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க அவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும்

தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க 5 ஆண்டு அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. தவறினால் மீண்டும் கட்டணம் செலுத்தி 8 போட்டு ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க தவறினால் ஆண்டுக்கு அபராதமாக ₹50 செலுத்தி ஓட்டுனர் உரிமம் புதுப்பித்துக்கொள்ள 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 5 ஆண்டு அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓரு ஆண்டு தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் 8 போட்டு காட்ட வேண்டும்.
இந்த புதிய நடைமறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே ஓட்டுனர் உரிமம் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள், அதனை பார்த்து உரிய காலத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க முன்பு 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்குள் புதுப்பிக்க தவறினால் ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்தி, மீண்டும் 8 போட்டு பாஸ் ஆனால் தான் ஓட்டுனர் உரிமம் கிடைக்கும்’ என்றனர்.

No comments:

Post a Comment