வானில் தோன்றும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்.காற்றில் ஏறிப்பயணம் சென்றால் பாதை அங்கே விலகும் என்ற எண்ண ஓட்டத்தின் எழுஞாயிறாய் கிராமத்து பள்ளியெனும் கீழ் நிலையகற்றி ஊராட்சி பள்ளியிலும் உத்வேகம் காட்ட மாதிரிப்பள்ளியாய் மாண்புறக்காணும் வாசலாய் இடைமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று ஆசிரியர் தினம் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. குழந்தைகள் ஆசிரியர்களை மகிழ்விக்கும் விதமாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்...மாணவ மாணவிகளை மகிழ்விக்கும் விதமாக அனைத்து குழந்தைகளுக்கும் பாப்கார்ன்.பஞ்சுமிட்டாய் வழங்கி மகிழ்வித்தனர்,475 குழந்தைகளும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றை வாங்கி உண்டனர்.
அவர்களின் மகிழ்விற்கு எல்லையே இல்லை. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவி ஆசிரியர் திருமதி ஹ.புஷ்பலதா அவர்கள் செய்திருந்தார்
No comments:
Post a Comment