அடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 19, 2019

அடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுத பூஜை ஆகிய திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் வருகிறது.
வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 7 ஆகிய இரு தினங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி வருவதால் இரண்டு நாட்களும் அரசு விடுமுறை தினங்கள் ஆகும். அதற்கு முன்னதாக அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தினங்கள் சனி, ஞாயிறு என்பதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கின்றது. எனவே இந்த நான்கு நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
மேலும் அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய இரு தினங்கள் மட்டும் லீவ் எடுத்தால் தொடர்ச்சியாக ஒருவாரம் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment