கோவை மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு 4 அரசு பள்ளிகள் தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 18, 2014

கோவை மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு 4 அரசு பள்ளிகள் தேர்வு

கோவை மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு சிறந்த 4 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி

, மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்து காமராஜர் விருது வழங்கப்படுகிறது. 
இந்த விருதுகள் பள்ளியின் மாணவர்கள் தேர்ச்சி விகிதம், ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன், பள்ளியின் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
 கோவை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 4 சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இதில் ராமம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வால்பாறை அரசு வாட்டர்பால்ஸ் நடுநிலைப்பள்ளி, நெகமம் அரசு உயர்நிலைப்பள்ளி, வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரமும், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும்,மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சமும் பள்ளிக் கல்வித்துறை வழங்குகிறது. பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா விரைவில் நடக்கும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment