வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 6, 2014

வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்று வானிலைஅதிகாரி தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை உள்ள காலமாகும். ஆனால் அக்டோபர் 15-ந்தேதி
முதல் அக்டோபர் 30-ந்தேதிக்குள் வட கிழக்கு பருவமழை தொடங்கும். அது தொடங்கும்போதுதான் தென்மேற்கு பருவமழை விலகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் வடகிழக்கு பருவமழை தொடங்க 10 அல்லது 15 நாட்கள் தான் இருக்கிறது. அதாவது 2வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் இந்த மாதஇறுதிக்குள் தொடங்கும். இந்த நிலையில் இலங்கை அருகே மேலடுக்கில்ஒரு சுழற்சி காணப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று(திங்கட்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment