தமிழகத்தில் மின் கட்டணம் 15% அதிகரிப்பு: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 11, 2014

தமிழகத்தில் மின் கட்டணம் 15% அதிகரிப்பு:


தமிழகத்தில் 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டணங்கள் வருமாறு

வீடுகளுக்கு 1 முதல் 100 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 40 காசு உயர்வு
101 முதல் 200 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 45 காசு உயர்வு
201 முதல் 500 யூனிட் வரை
முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 50 காசு உயர்வு
201 முதல் 500 யூனிட்டுகள் வரை, யூனிட் ஒன்றுக்கு 60 காசு உயர்வு
500 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு

தொழிற்சாலை யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு
வணிக நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்வு
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.85 உயர்வு

நெசவாளர்களுக்கு சலுகை:2 மாதத்திற்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் விசைத்தறி நெசவாளர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.
கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் 100 யூனிட்டுகளுக்கு வழக்கம் போல் கட்டணம் செலுத்த தேவையி்ல்லை.100யூனிட்டுக்கு.மேல் பயன்படுத்தினால், வீடுகளுக்கான மின் கட்டணமே வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment