ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய அரசு ஆணைகளை நீக்கக் கோரி கண்டன ஆர்பாட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 11, 2014

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய அரசு ஆணைகளை நீக்கக் கோரி கண்டன ஆர்பாட்டம்

உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலில் 10.12.2014 புதன் கிழமை மாலை 5.00 மணியளவில் திரு. வி, வீரமணி அவர்கள் தலைமையிலும் திரு. சி. சரவணன் முன்னிலையிலும் அனைத்து ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து “குழந்தைகள் உரிமை” எனக் காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய அரசு ஆணைகளை நீக்கக் கோரியும்-
தமிழக அரசு அனைத்து ஆசிரியர்களையும் பாதுகாக்கும் வண்ணம் ஆசிரியர் பாதுகாப்பு சட்டம் இயற்றி ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனக் கேட்டு கோரிக்கையும், கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது திரு. கோ. பாஸ்கரன் , திரு. ஏ. அந்தோணி ஜோசப் மற்றும் திரு. ஆர். மருதவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திரு,ஜி. செங்குட்டுவன் அவர்கள் நன்றி கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment