2015-ம் ஆண்டிற்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2015-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை நாட்கள் கீழ் கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஐகோர்ட்டுக்கு 2015-ம் ஆண்டு மே 1-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை கோடை விடுமுறையும், அக்டோபர் 17-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறையும் விடப்படுகிறது.
இதுதவிர வருகிற (2015-ம் ஆண்டு) ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு விடுமுறையும், 2-ந்தேதி ஐகோர்ட்டுக்கு மட்டும் விடுமுறையும் விடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், குடியரசு தினம் முன்னிட்டு ஜனவரி 26-ந்தேதியும், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 2-ந்தேதியும், புனித வெள்ளியை முன்னிட்டு, ஏப்ரல் 3-ந்தேதியும், தமிழ்புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14-ந்தேதியும் ஐகோர்ட்டுக்கு விடுமுறையாகும்.
மே தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதியும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 17-ந்தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 24-ந்தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந்தேதியும், ஆயுதபூஜை, விஜயதசமிக்காக அக்டோபர் 21 மற்றும் 22-ந்தேதிகளும், தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலும், மிலாதுநபி பண்டிகைக்காக டிசம்பர் 23-ந்தேதியும் விடுமுறை விடப்படுகிறது.
இதுதவிர உழவர் திருநாள், ஜனவரி 17-ந்தேதியும், தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 21-ந்தேதியும், ரம்ஜான் பண்டிகை ஜூலை 18-ந்தேதியும், சுதந்திர தினம் ஆகஸ்டு 15-ந்தேதி கிருஷ்ணஜெயந்தி செப்டம்பர் 5-ந்தேதியும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, December 10, 2014
New
2015-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை நாட்கள்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment