சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஆட்சேப கருத்துக்காக கைது செய்வது சரியல்ல: சுப்ரீம் கோர்ட்டு கருத்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 10, 2014

சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஆட்சேப கருத்துக்காக கைது செய்வது சரியல்ல: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான கருத்து தெரிவிக்கிறவர்களை, மாநில அரசுகள் கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றன. இதற்கு தகவல் தொழில் நுட்பச்சட்டத்தின் பிரிவு 66-ஏ வழி வகுக்கிறது. இப்படி கருத்து உரிமைக்கு எதிராக உள்ள சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜே.செலமேஷ்வர் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வக்கீல், “தகவல் தொழில் நுட்பச்சட்ட பிரிவு 66-ஏயின்படி கைது நடவடிக்கைகள் செய்வது நியாயம் என வாதிடவில்லை. அதே நேரத்தில் இது வழக்கமான நடவடிக்கை அல்ல” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இது வழக்கமான நடவடிக்கை அல்ல என்றாலும்கூட, (கருத்து) உரிமை மீறல்கள் திமிரானது. கொடுமையானது” என கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment