FLASH NEWS: வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த 34 இடைநிலை ஆசிரியர்கள் (சங்கம் வேறுபாடின்றி) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மறுசீராய்வு மனுவை ஏற்று 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 3, 2014

FLASH NEWS: வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த 34 இடைநிலை ஆசிரியர்கள் (சங்கம் வேறுபாடின்றி) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மறுசீராய்வு மனுவை ஏற்று 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்கக் கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013) தொடர்ந்தனர். அவ்வழக்கு நீதியரசர் சந்துரு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 34 ஆசிரியர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறுசீராய்வு மனுவை தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கு (REV.APPLW.300/2014) இன்று நீதிமன்ற எண்.10 நீதியரசர்.சுந்தரேஷ் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment