ரயிலில் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு வசதி: ஏப்., 1ம் தேதி அமல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 18, 2015

ரயிலில் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு வசதி: ஏப்., 1ம் தேதி அமல்

ரயில் பயணத்திற்கு, 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி, ஏப்., 1ம் தேதி முதல் அமலாகிறது. இதற்கான நடவடிக்கைகளில், ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது.ரயிலில் பயணம் செய்ய, 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பண்டிகை, முகூர்த்த நாட்களில் பயணிக்க, முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில், டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.இதற்கு தீர்வாக, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு வசதி கொண்டு வர, முடிவு செய்யப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டில், இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த
வசதியை செயல்படுத்தும் நடவடிக்கைகளில், ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது.

ரயில்வே துறையில் உள்ள, 17 மண்டலங்கள் மற்றும் ரயில்வே வாரியம் உட்பட, அனைத்து அலுவலகங்களிலும், புதிய வசதியை செயல்படுத்த தேவையான சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை மாற்றுப் பணியை, சி.ஆர்.ஐ.எஸ்., என்றழைக்கப்படும், ரயில்வே தகவல் தொடர்பு மையத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இருப்பினும், தாஜ், கோம்தி எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்களில், ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி, குறைந்த நாட்களில் முன்பதிவு செய்யும் வசதி இருக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 360 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதியிலும் மாற்றம் இருக்காது.

No comments:

Post a Comment