ஐஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 22, 2015

ஐஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு, சிறப்பு வகுப்புகள் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பில் நடத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) பிரதானத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.

பிரதானத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இதற்கான விண்ணப்பம் இந்தப் பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இந்தப் பயிற்சியில் சேரலாம். வேறு பயிற்சி மையத்தில் பயின்றவர்களும், எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

தகுதியுடைய மாணவர்கள் இந்தப் பயிற்சி மையத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், 3 புகைப்படங்கள், பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றைச் சமர்ப்பித்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மத்திய தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில், தகுதிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்காக, இந்தப் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், கல்லூரிப் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு புது தில்லி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படியாக ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு இல்லத்தில் 10 நாள்கள் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ளவும் இந்தப் பயிற்சி மையம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் நாள்கள் பற்றிய விவரம், இந்தப் பயிற்சி மையத்தின் www.civilservcicecoaching.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முதல்வர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை -28. தொலைபேசி எண்: 044-24621475.

No comments:

Post a Comment