ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 31, 2015

ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை


ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பே (பயணம் தேதியை தவிர) முன்பதிவு செய்ய முடியும். உதாரணமாக, ஏப்ரல் 1, 2015ம் தேதி அமல்படுத்தப்பட உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவில் ஜூலை 28, 2015ம்(120 நாட்களுக்கு முன்பே) தேதி வரை முன்பதிவு செய்யலாம். இருப்பினும் 120-நாள் முன்பதிவு விதிமுறைகள் சில ரயில்களுக்கு பொருந்தாது, அதாவது, தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்ற பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்ய குறைந்த நேர வரம்புகள் தற்போது உள்ளது போல் இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த ரயில்களில் 30 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும். 

பரபரப்பான நேரங்களில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கையில் தற்போது சில கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரயில்வே அமைச்சகம் விதித்துள்ளது. அதன்படி தற்போது, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, ஒரு யூசர் லாக்இன்-ஐப் பயன்படுத்தி, ஒரு தடவை மட்டுமே இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றால், தானாகவே அது லாக்-அவுட் ஆகிவிடும், என்று ரயில்வே அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், ஒரே நேரத்தில் புறப்படுதல்/ திரும்பி வருதலுக்கு முன்பதிவு செய்ய இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. 

No comments:

Post a Comment