வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 19, 2015

வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள்

வரி பாக்கி வைத்துள்ள 300 எம்.பி.க்கள் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தாதோர் பட்டியலில் உள்ளதாக புது தில்லி மாநகராட்சி தெரிவித்தது.

லோக்சபா எம்.பி.,க்கள் 166 பேரும், ராஜ்யசபாவின் எம்.பி.,க்கள் 151 பேரும் உள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர்கள்: காங்., தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, ராம்விலாஸ் பஸ்வான், காங்கிரசை சேர்ந்த திக்விஜய் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் பலர்.


'மாஜி'க்கள் 859 பேர்
என்.எம்.டி.சி., வெளியிட்டு உள்ள மற்றொரு பட்டியலில், 'மாஜி'க்கள் பலரின் பாக்கி பட்டியலிடப்பட்டு உள்ளது. அதில், 859 பேர் இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில், முதலிடத்தில் இருப்பது, காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர்; அவர், 17 லட்சம் ரூபாய் பாக்கி வைத்து உள்ளார்.



உயர் மக்கள் வசிப்பிடம்:

'நியூடெல்லி முனிசிபல் கவுன்சில்' எனப்படும், என்.எம்.டி.சி., பகுதியில் தான், பார்லிமென்ட், ராஷ்டிரபதி பவன், அமைச்சரவை தலைமை செயலகங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் குடியிருப்பு, சுப்ரீம் கோர்ட், உயர் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு போன்ற இடங்கள் உள்ளன. இங்கு, சாதாரண மக்களுக்கு வீடுகளோ அல்லது சொத்துகளோ கிடையாது.



யார் யார், எவ்வளவு பாக்கி?





* முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்நாராயண் பிரசாத் நிஷாத்: 18 லட்சம் ரூபாய்.

* முன்னாள் பிரதமர் தேவகவுடா: 1.50 லட்சம் ரூபாய்.

* தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்: 1.27 லட்சம் ரூபாய்.
* முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: 23 ஆயிரம் ரூபாய்.
* காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங்: 25 ஆயிரம் ரூபாய்.
* பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி: 3,300 ரூபாய்.
* மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்: 49 ஆயிரம் ரூபாய்.
* மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: 13 ஆயிரம் ரூபாய்.
* மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா: 13 ஆயிரம் ரூபாய்.
* முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்: 7,500 ரூபாய்.
* காங்., தலைவர் சோனியா: 200 ரூபாய்.

No comments:

Post a Comment