ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 1, 2015

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் சகாதே, வணிக வரித்துறை இணை கமிஷனராக கோவையில் நியமிக்கப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் மேட்டூர் துணை கலெக்டர் எஸ்.அனீஷ் சேகர், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வணிக வரித்துறை இணை கமிஷனராக (அமலாக்கம்) கோவையில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.வணிக வரிகள் இணை கமிஷனர் (அமலாக்கம்) மரியம் பல்லவி பால்தேவ் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் வணிக வரிகள் இணை கமிஷனராக (அமலாக்கம்) நியமிக்கப்பட்டுள்ளார்.திருவள்ளூரில் துணை கலெக்டராக (பயிற்சி) இருந்த டி.எஸ்.ராஜசேகர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை துணை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்று பிறப்பித்தார்.

No comments:

Post a Comment