விடைத்தாளில் முகப்பு தாள்;வரும் 11ல் பணிகள் துவங்கும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 7, 2016

விடைத்தாளில் முகப்பு தாள்;வரும் 11ல் பணிகள் துவங்கும்

நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ல் துவங்கி, ஏப்., 1 வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தனித்தேர்வர் உட்பட மொத்தம், 22 ஆயிரத்து, 742 பேர் தேர்வெழுத உள்ளனர்; 64 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பொதுத்தேர்வு எழுதுவோரின், புகைப்படத்துடன் கூடிய முகப்பு தாள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்படுகிறது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி மாவட்டத்தில் அமைத்துள்ள தேர்வு மையங்களுக்கு, முகப்பு தாள் கட்டு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

முதன்மை கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களின் தலைமை ஆசிரியர்களிடம், வரும் 8ம் தேதி முதல், 11ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 11ம் தேதி முதல், முதன்மை விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணியில், தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment