28 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் இந்தியா! தெற்காசிய விளையாட்டு போட்டியில் அசத்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 7, 2016

28 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் இந்தியா! தெற்காசிய விளையாட்டு போட்டியில் அசத்தல்

12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இன்றும் இந்தியாவின் தங்க வேட்டை தொடர்கிறது. குறிப்பாக, நீச்சல் போட்டியில் 4 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 10 பதக்கங்களை இன்று தட்டிச்சென்றது. மல்யுத்த போட்டியில் 4 தங்கம், ஒரு வெள்ளி பதக்கமும், பளுதூக்குதலில் 3 தங்கப்பதக்கங்களையும் இந்தியா இன்று வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் 28 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இலங்கை 38 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 13 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment