அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்-DINAMALAR - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 15, 2016

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்-DINAMALAR

தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நீடித்து வரும் நிலையில், மேலும் பல சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இன்று முதல், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள தால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வருகிறது. மூத்த அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியும், தீர்வு கிடைக்காததால், பிப்., 12ல், தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டது; இதில், அரசு ஊழியர்கள், 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.தொடர் போராட்டத்தால், வருவாய்த்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. சத்துணவு வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு, மாற்றுப் பணியாளர்கள் நியமித்து, நிலைமை சமாளிக்கப்படுகிறது. தலைமைச் செயலக சங்கம், அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நீதித்துறை ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால், போராட்டம் மேலும் தீவிரமாகிறது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டம், நாளை துவங்குகிறது. இதில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, பல அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிப்புகள் வெளியானால், போராட்டம் முடிவுக்கு வரும்.

இது குறித்து, அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம். இன்று முதல், மாவட்டங்கள் தோறும் தினமும் மறியல் நடக்கும். இதுவரை, போராட்டத்தில் இணையாத பல சங்கங்களும் ஆதரவு அளித்து வருகின்றன.போராட்டம் முறியடிப்பு என்ற அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்காது; இன்னும் வேகம் பெறும். கோரிக்கைகளை ஏற்று, அரசாணைகளை தந்தால் மட்டுமே,ஸ்டிரைக் கைவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், மூத்த அமைச்சர்கள் நடத்திய பேச்சு திருப்திகரமாக இருந்தது. கோரிக்கைகளை முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று, விரைவில் அரசாணை பிறப்பிப்பதாக உறுதி அளித்தனர். அரசியல் சார்புடைய, ஒரு சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது; அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், அரசியல் கட்சி ஒன்று போராட்டத்தை துாண்டிவிட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த ஊழியர்களின் பிரதிபலிப்பு அல்ல.
ஆர்.சண்முகராஜன் மாநில தலைவர், அரசு அலுவலர் ஒன்றியம்

No comments:

Post a Comment