பிற மாநில மாணவர்களுக்கான மருத்துவம், பொறியியல், பி.பார்ம் கவுன்சிலிங் வரும் 16ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவம், பொறியியல், பி.பார்ம் கல்லுாரிகளில் 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், பாரம்பரிய மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு இல்லை.
இவர்களுக்கான சென்டாக் கவுன்சிலிங் வரும் 16ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. இதில் கட் ஆப் மதிப்பெண் 196.444 முதல் 164 வரை உள்ள 100 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
அதனை தொடர்ந்து 10 மணிக்கு 163.666 முதல் 143 வரை கட் ஆப் எடுத்த மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சிலிங் நடக்கிறது. பிற மாநில மாணவர்களுக்கான பி.பார்ம் கவுன்சிலிங் 11:௦௦ மணிக்கு துவங்குகிறது. இந்த பிரிவில், 195.666 முதல் 143.666 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
காலியிடம் எவ்வளவு:
பி.எஸ்.சி., நர்சிங் படிப்பை பொறுத்தவரை பிற மாநில மாணவர்களுக்கு பொது பிரிவு-8, எஸ்.சி.,-2, பழங்குடி-1 என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிசியோதெரபி பொது-1, பி.எஸ்.சி.,பொது-1, பி.பார்ம் படிப்பில் பொது-6, எஸ்.சி.,-1, பழங்குடி-1 என்ற இட ஒதுக்கீடு விகிதத்தில் பிற மாநில மாணவர்களுக்கு இடங்கள் உள்ளன.
பி.டெக்., கவுன்சிலிங்
பிற மாநில மாணவர்களுக்கான பி.டெக்., கவுன்சிலிங் பகல் 12.00 மணிக்கு துவங்குகிறது. இதில் கட் ஆப் மதிப்பெண் 1 முதல் ௧88 வரை எடுத்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். 2.00 மணிக்கு 189 முதல் 376 வரை, 3.00 மணிக்கு 377 முதல் 564 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.பிற மாநில மாணவர்களின் அலைச்சலை குறைக்கும் வகையில் அனைத்து படிப்புகளுக்கும் ஒரே தேதியில் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலிங்கிற்கு வரும் பிற மாநில மாணவர்கள் 850 ரூபாய்க்கு தி கன்வீனர், புதுச்சேரி என்ற பெயருக்கு புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுத்து வர வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பழங்குடியினர் 350 ரூபாய்க்கு டி.டி.,எடுத்தால் போதுமானது. பிற மாநில மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் www.centaconline.in மற்றும் www.centacprof.net.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment