மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 12, 2016

மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம்!

கவிஞர் வைரமுத்து பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஜூலை 13 மாலை 6:00 மணிக்கு கவிஞர்கள் திருநாள் நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து மதுரையில் நேற்று வைரமுத்து கூறியதாவது:

இவ்விழாவில் இலங்கை யாழ்ப்பாண பல்கலை தமிழ்த்துறை மற்றும் எழுகலை இலக்கியப் பேரவையால் தேர்வு செய்யப்பட்ட ஈழத்து கவிஞர்கள் ஜமீல், நவுபல் ஆகியோருக்கு சிறந்த கவிஞர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. மதுரை - தேனியை சேர்ந்த தாய்வழிக் கல்வி பயின்ற ஏழை மாணவர்களுக்கு விருது, நிதி வழங்குகிறோம்.

கல்வி கற்காத போது சமூகம் ஒழுக்கமாக இருந்தது. கல்வி கற்ற இன்றைய சமூகம் ஒழுக்கமாக இருக்கிறதா என்ற கேள்வி கேட்கும் நிலையில் உள்ளது. மொழி, கவிதைகளை நேசிப்பவர்கள் அற வழியில் நடப்பார்கள். பெண்களை சக உயிராக நினைக்கும் போது தான் வக்கிரம் குறையும்.

சமூகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட, பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அவசியம் தேவை. இவ்வாறு கூறினார். ஏற்பாடுகளை மதுரை வெற்றித்தமிழர் பேரவைத் தலைவர் சுரேஷ் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment