கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 12, 2016

கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தெகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
   
கல்வி உதவி தெகை பெற, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ, மாணவியர்கள் எவ்வித நிபந்தனையுமின்றியும், முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அவரவர் பயிலும் கல்வி நிறுவனத்திலோ அல்லது www.tn.gov.in/bcmbcdept என்ற அரசு இணையதளத்தில் பெற்று உரிய சான்றுகளுடன் தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை பெற சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment