பள்ளி,கல்லூரிகளுக்கு 110 விதியின் கீழ் இன்றைய அறிவிப்புகள் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 23, 2016

பள்ளி,கல்லூரிகளுக்கு 110 விதியின் கீழ் இன்றைய அறிவிப்புகள் !

விதி 110; அறிவிப்புகள் பல

முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:

*திருச்சி, நெல்லையில் பொறியியல் கல்விக்கான மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள்*

*பெரும்பாக்கத்தில் ரூ.8.4 கோடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி*

*பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 60. 79 கோடி*

*நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.*

*மேட்டுப்பாளையத்தில் ரூ. 8. 9 கோடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி*

*அண்ணா பல்கைலயில் ரூ. 50 கோடி செலவில் 5 ஆயிரம் பேர் அமரும் அளவில் கூட்டரங்கம்*

*அண்ணா பல்கலையில் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம்*

*விழுப்புரம் - நீலகிரியில் திறந்தவெளி பல்கலை., மண்டல மையங்கள்.*

*மதுரையில் காமராஜர் பல்கலை.,யில் பல்நோக்கு மருத்துவமனை; ஜெ.,*

*மதுரை காமராஜர் பல்கலை.,யில் ரூ. 6. 75 கோடியில் உள் விளையாட்டரங்கம், நூலகம்*

*மலை பிரதேசத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 8 ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு மழை கோட்.*

*555 பள்ளிகளில் இணையதளம் வழியாக கணினி பாடம் கற்பித்தல்*

*19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.*

*அரசு கல்லுாரிகளில் படித்த 100 மாணவர்களுக்கு வௌிநாட்டில் பயிற்சி.*

இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

No comments:

Post a Comment