புதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 10, 2016

புதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்

கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, இந்த மாதம் புதிய ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி முதலான நிலுவைத் தொகை, அரியர்ஸாக வழங்கப்படும். இதுவரை வாங்கிய ஓய்வூதியத்தைவிட, 2.57 மடங்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

அனைத்து ஓய்வூதிய அலுவலகங்களும், வங்கிகளும், இந்த மாத இறுதிக்குள், புதிய ஓய்வூதியம் மற்றும் அரியர்ஸ் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதிக்குப் பின், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment