சி.பி.இ., திட்டத்தில் தமிழக கல்லூரிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 4, 2016

சி.பி.இ., திட்டத்தில் தமிழக கல்லூரிகள்

பல்கலை மானியக் குழு மூலம் செயல்படுத்தப்படும், சி.பி.இ., எனும், &'பொட்டன்ஷியல் ஆப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், ஏழு கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
பல்கலை மானியக் குழு மூலம், மத்திய அரசு, பொட்டன்ஷியல் ஆப் எக்ஸலன்ஸ்&' திட்டத்தின் கீழ், உயர்தர திறன்
கொண்ட கல்லுாரிகளை, ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்கிறது. இக்கல்லுாரிகளின் வளர்ச்சிக்கு, 1 கோடி ரூபாய் முதல், 1.50 கோடி ரூபாய் வரை நிதி வழங்குகிறது.
மத்திய அரசின், 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், 123 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு, யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, ஏழு கல்லுாரிகள் இடம் பெற்றுள்ளன.
இதன்படி, சென்னையைச் சேர்ந்த, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லுாரி, ஸ்டெல்லா மேரிஸ், மகளிர் கிறிஸ்டியன், ஜஸ்டிஸ் பசீர் அகமது சயத் பெண்கள் கல்லுாரி, துவாரகா தாஸ் கோவர்த்தன் தாஸ் வைஷ்ணவ், கோவை சி.எம்.எஸ்., மதுரை விவேகானந்தா ஆகிய கல்லுாரிகள், இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment