பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, நவ., 6ல் நடக்கும். இதற்கான விண்ணப்ப அறிவிப்பை, தமிழக அரசின் தேர்வுத்துறை வெளியிடும் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.
# கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு
சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, தமிழகத்தில், 1.13 லட்சம் பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விரும்பும் மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஜூலை, 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment