ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 2, 2016

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  புதன்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கி செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது.
முதல் நாளில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.  4-ஆம் தேதி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி உயர்வு பெற்று மாறுவதும், 6-இல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், பொது மாறுதல் கலந்தாய்வுகளும் நடைபெறும்.ஆகஸ்ட் 7-இல் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வுக் கலந்தாய்வும், 13-இல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலும், 14-இல் இடைநிலைஆசிரியர்களுக்கான பொது மாறுதலும், 20-இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் பெறுதலும், 21-இல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும்.

பள்ளிக் கல்வித் துறை

அதேபோல், பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்துக்குள் இடமாறுவதற்கான கலந்தாய்வு வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7-இல் அரசு,நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக் கலந்தாய்வும், 13-இல் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்துக்குள் கலந்தாய்வும் நடைபெறுகிறது. 20-இல் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான மாறுதலும், 21-இல் முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வும் நடைபெறும்.22-இல் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக் கலந்தாய்வும், 23-இல் உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறும் கலந்தாய்வும், 24-இல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வும், 27 முதல் 29-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும் நடைபெறும்.

செப்டம்பர் 3, 4-இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 6-இல் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வும் நடைபெறும்.இந்தக் கலந்தாய்வுகள் நடைபெற உள்ள இடங்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறைத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment