நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 25, 2016

நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு !

நீட்' எனப்படும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக பீஹாரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஷிவாங்கி சிங் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
'நீட்' தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. வெவ்வேறு தகுதி நிலைகளின் அடிப்படையில்,
இரண்டுக்கும் வெவ்வேறு கேள்வித் தாள்கள் அளிக்கப்பட்டன; ஆனால், இரண்டுக்கும் சேர்த்து, தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது, சட்டவிரோதமானது.இரண்டு தேர்வுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்கு ஏற்ப, இவற்றை சமன் செய்ய வேண்டும். அதனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, 'நீட் தேர்வு குறித்த மற்ற வழக்குகளுடன், இந்தவழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்' என, அறிவித்தது.

No comments:

Post a Comment