பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய 170 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆண், பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது 48ஆவது ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் தொழில்நுட்பப் படிப்பு படித்த ஆண்களையும், 19ஆவது சேர்க்கையின் அடிப்படையில் பெண்களையும் சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 170
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: சிவில் - 42, மெக்கானிக்கல் - 15, எலக்டரிக்கல், இ.இ. - 21, ஏரோநாட்டிகல் - 10, கம்ப்யூட்டர், ஐ.டி. - 23, எலக்ட்ரானிக்ஸ்-டெலி காம், இ.சி. - 26, எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் - 11, இண்டஸ்ட்ரியல், ஆட்டோமொபைல், மெட்டலர்ஜி, ஆர்கிடெக்சர், கெமிக்கல், புரொடக்சன், டிரான்ஸ்போர்டேசன் உள்ளிட்ட பிரிவுகளுக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 01.04.2017 தேதியின்படி 20 - 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1990 மற்றும் 01.04.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், 4ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment