கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 10, 2016

கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார்
கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, தமிழகத்தில், 1.13 லட்சம் பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விரும்பும் மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஜூலை, 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment