TNTET :தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 1, 2016

TNTET :தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியை தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் புதுக்கோட்டையில் பெரியநாயகம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான இந்த
பள்ளியில் கடந்த 13.12.2011 அன்று பட்டதாரி ஆசிரியையாக தூத்துக்குடி அரசடி பனையூரைச் சேர்ந்த பூமணி என்பவர் நியமிக்கப்பட்டார்.இவரது நியமனத்தை அங்கீகரிக்கும்படி பள்ளி நிர்வாகம் தூத்துக்குடி கல்வி மாவட்ட அதிகாரிக்கு மனு அனுப்பியது.ஆசிரியர் தகுதித்தேர்வில் பூமணி தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவரது நியமனத்தை அங்கீகரிக்க மறுத்து 5.6.2014 அன்று கல்வி அதிகாரி உத்தரவிட்டார். ஐகோர்ட்டில் மனு சிறுபான்மை பள்ளியில் நியமிக்கப்படும்ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து விட்டு எனது நியமனத்தை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று பூமணி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இதேபோன்று 30-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் பூமணி சார்பில் வக்கீல் டி.ஏ.எபனேசர் ஆஜராகி வாதாடினார்.
சம்பளம் வழங்க வேண்டும்
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு மனு செய்துள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ளது. ஆனால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, மனுதாரருக்கும், மனு தாக்கல் செய்துள்ள மற்றவர்களுக்கும் தமிழக அரசு 4 வாரத்துக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அவர்களை வேலையில் இருந்து நிறுத்தக்கூடாது.
இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுவின் தீர்ப்பை பொறுத்து இருக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment