ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று
சாதனை படைத்தார். ஆசிய தடகள போட்டியில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். இவர் ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஒட்டத்திலும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இதே போட்டியில் இந்தியாவின் கோபி தொனக்கால் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் 11 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

No comments:
Post a Comment